
English
Tamil
English
About Us
I wish to introduce myself as RANGRAJAN (Rangan) residing at B.4/18, Hanuman Ghat, Varanasi (Uttar Pradesh), India since 1984. I am doing vaidhigam services by the grace of Sri Guruji. Following services are provided to the visiting pilgrims in Kashi:
- Making Travel arrangements to pick up/drop at Varanasi Railway Station/Airport.
- Making arrangements for their comfortable stay (according to their needs).
- Assisting them to perform the rituals as per their traditions/customs at Prayag Raj (Allahabad), Varanasi (Kashi) and Gaya with utmost care and to their satisfaction.
- Arranging their traditional food as Coffee, Breakfast, Lunch and Dinner as per their desire.
- Transportation to Varanasi to Prayag Raj and return and from Varanasi to Gaya and back.
- Boat service for Panch Ganga rituals and watching Ganga Arti in the evening at Varanasi.
- Travel arrangements for various temple visits and sightseeing in Varanasi as per their requirement.
Tamil
ராதே கிருஷ்ணா !
- வருகை தரும் யாத்ரீக அன்பர்களுக்கு கீழ்கண்ட உதவிகளை செய்து வருகிறேன்.
- காசி, ப்ரயாக்ராஜ் (அலகாபாத்) கயா ஆகிய இடங்களில் அவரவர் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை சிரத்தையாக செய்து கொடுத்தல்.
- காசியில் அவரவர் வசதிக்கு ஏற்ப தங்குவதற்கு ஏற்பாடு, ரயில் நிலையம் / ஏர்போர்ட்டில் இருந்து தங்கும் இடத்திற்கு வாகன வசதி.
- காசியில் பஞ்சகங்கா (ஐந்து இடங்களில்) செய்ய வேண்டியவைகளுக்கு படகு iBoat) வசதி ஆகியவை.
- காசியிலிருந்து ப்ரயாக்ராஜ் (அலகாபாத்) மற்றும் கயா சென்றுவர வாகன வசதி.
- ப்ரயாக்ராஜ் (அலகாபாத்) கயா ஆகிய தலங்களில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற ஏற்பாடு.
- காசியில் தரமான உணவு, ஆகார வசதி.
- காசியில் தரிசிக்க வேண்டிய கோவில்களுக்கு சென்று வர ஏற்பாடு.
Spiritual TOur of kashi
Pitrupuja, Visit to Important Temples & Kashi Yatra
English
Tamil
English
Join us for a spiritual journey to the sacred Kashi Yatra in Varanasi. Your visit offer seamless experiences, including the Holy City Varanasi, witnessing ancient rituals, and exploring the divine atmosphere of one of India’s most ancient temples and Holy river Ganga. Let us make your pilgrimage unforgettable so that you return with blessings of Lord Viswanath and Maa Annapurneshwari .
Tamil
ராதே கிருஷ்ணா !
நமஸ்காரம் 

நான் ரங்கராஜன் வாரணாசி என்கிற காசியில் இருந்து பேசுகிறேன். நமது புண்ணிய பாரத பூமியில் பிறந்த அனைவரும் குறிப்பாக விசேஷமாக அந்தணர்கள் தன் வாழ்நாளில் ஒரு முறையாகவது காசி யாத்திரை செய்ய வேண்டும். காசி யாத்திரை என்பது சுற்றுலா மாதிரியாக விஜயம் செய்வது இல்லை.
காசியாத்திரை என்பது 1) ப்ரயாகை (அலகாபாத்) 2) காசி 3) கயா என்னும் மூன்று க்ஷேத்திரங்களுக்கும் சென்று ஆங்காங்கே விதிக்கப்பெற்ற / செய்ய வேண்டிய பித்ரு காரியங்களை செய்து நமது கடமையை பூர்த்தி செய்ய வேண்டும்.
1) பிரயாகை என்னும் க்ஷேத்திரம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் ஒன்று சேர்வதால் த்ரிவேணி ஸங்கமம் என்று அழைக்கப்படுகிறது. ஸரஸ்வதி என்னும் நதியானவள் அந்தர்வாஹினியாக இருப்பதால் நமது கண்களுக்குப்புலப்படாது.
பிரயாகையில் செய்ய வேண்டிய கர்மா / கார்ய விபரம் :-
(1) விக்னேஸ்வர பூஜை (2) ஸங்கல்பம் (3) ப்ராயச்சித்தம் (4) வேணி தானம் (5) த்ரிவேணி ஸங்கமம் ஸ்நானம் (6) ஹிரண்ய / பார்வண ச்ராத்தம்.
இந்த க்ஷேத்திரத்தில் ஸங்கல்பம் ப்ராயச்சித்தம் ஆகியவை முடிந்து (ஸ்நானத்திற்கு முன்பு) வபனம் / முண்டனம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஸங்கம ஸ்நானம், வேணி தானம் பிறகு மறுபடியும் ஸங்கம ஸ்நானம் செய்து, தங்கும் இடம் வந்து ஹிரண்ய ரூபமாகவோ அல்லது பார்வண ரூபமாகவோ ச்ராத்தம் செய்து பிண்டப்பிரதானம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதங்களை பெறுவோம்.
மறுநாள் காசி க்ஷேத்திரத்தில் விக்னேஸ்வர பூஜை; ப்ராயச்சித்தம்; மஹா ஸங்கல்பம்; செய்து கொண்டு நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய (நம் முன்னோர்களையே வேண்டிக்கொண்டு) ச்ராத்தங்களை ஹிரண்யமாகவோ அல்லது பார்வணமாகவோ செய்ய வேண்டும். ப்ராம்மணர்களுக்கு (அந்தணர்களுக்கு) போஜனம் செய்விக்கலாம். முடிவில் பிண்டபிரதானம் செய்து கங்கா ஜலத்தில் கரைக்க வேண்டும்.
இதற்கு மறுநாள் காசியில் படகு (Boat)ல் சென்று கங்கையில் மிக முக்கியமான (பஞ்சகட்ட ச்ராத்தம்) ஐந்து இடங்களில் பிண்ட பிரதானம் / தர்ப்பணம் செய்து பித்ருக்களை நமஸ்கரிக்க வேண்டும்.
அடுத்த நாள் (அதாவது யாத்திரையின் 4வது நாள்) மிகவும் முக்கியமான நாள். அன்று கயா க்ஷேத்திரம் சென்று அந்த புண்ய பூமியில் பல்குனி நதி; விஷ்ணு பாதம் மற்றும் அக்ஷய்ய வடம் என்ற மூன்று ஸ்தலங்களில் ஹிரண்யச்ராத்தம் செய்து பிண்ட ப்ரதானம் / தர்ப்பணம் ஆகியவை செய்து பித்ருக்களை (நமது முன்னோர்களை) முக்தி அடைய செய்ய வேண்டும்.
(a) ஜீவதோர் வாக்யகரணாத்
நமது தாய் தகப்பனார் ஜீவிதமாக இருக்கும்போது அவர்களுக்கு பணிவிடை செய்து, அவர்கள் சொற்படி நடக்க வேண்டும்/
(b) ப்ரத்யப்தம் பூரி போஜனாத்
ஆண்டு தோறும் நம் தாய் தந்தையர் இறந்த தினத்தில் அந்தணர்களுக்கு போஜனம் செய்வித்து, தக்ஷிணை கொடுத்து அவர்களை திருப்தி செய்ய வேணும்.
(c) கயாயாம் பிண்டதானாத்
கதாதரக்ஷேத்திரம் என்கின்ற கயையில் ஒரு முறையாவது ச்ராத்தம் செய்து பிண்டப்ரதானம் செய்ய வேண்டும்.
(d) த்ரிபி: புத்ரஸ்ய புத்ரதா
மேலே சொல்லப்பட்ட மூன்று கடமைகளையும் செய்தவன் புத்ரன் அல்லது பிள்ளை என்று அறியப்படுகிறான்
ப்ரயாகை, காசி, கயை ஆகிய மூன்று இடங்களிலும் நம் பெரியவர்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை மிகவும் சிரத்தையாகவும், பெரியவர்களை நினைத்துக் கொண்டும், பய பக்தியுடன் செய்ய வேண்டும். சிரத்தையாக (அதில் நம்பிக்கையுடன்) செய்வதற்கு பெயர்தான் சிராத்தம் எனப்படும்.
இந்த மூன்று க்ஷேத்திரத்திலும் அனுஷ்டிக்க வேண்டிய கர்மாக்களுக்கு தொடர்பு கொள்ளவும்:











